டெஸ்லா நிறுவனம் மாடல் ஒய் எல் (லாங் வீல் பேஸ்) என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் டூயல் மோட்டார்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளன. இது 5 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். கரடுமுரடான சாலைகளிலும், சகதி, தண்ணீர் தேங்கிய சாலைகளிலும் பயணிக்க ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த காரில் 75 கிலோவாட்அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். 6 சீட்கள் இடம் பெற்றுள்ளன. அடாப்டிவ் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது. இதுபோல் 18 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப் வூபர் கொண்ட சிறப்பான சவுண்ட் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ. 61.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+


