Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீவிரவாதிகள் முகாமை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டு: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்திய, அங்குள்ள தீவிரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையிலிருந்து பயணிகள் விமானத்தில் கோழிக்கோடு புறப்பட்டு சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அன்னையர் தின வாழ்த்துகளை, அன்னையர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று, அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அளித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுகள். இந்த போரை வலிமையாகவும், திறமையாகவும் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படை அதிகாரிகளுக்கும், முப்படை வீரர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள், நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.