Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டென்னிஸ் தரவரிசை வெளியீடு சின்னர் நம்பர் 1

லண்டன்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் முடிந்த நிலையில், ஏடிபி டென்னிஸ் ரேங்கிங் புதிய பட்டியல் வெளியாகி உள்ளது. இத்தாலி ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், 1,000 புள்ளிகள் பெற்றார். அதன் மூலம், ஏடிபி தரவரிசை பட்டியலில் ஒரு இடம் உயர்ந்து 2ம் இடத்துக்கு அல்காரஸ் உயர்ந்துள்ளார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் 2ம் இடம் பிடித்ததால், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருக்கு 650 புள்ளிகள் வழங்கப்பட்டன. அதனால், அவர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேமயம், 2ம் இடத்தில் இருந்த ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஒரு இடம் தாழ்ந்து, 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு பின், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் 4வது இடம், பிரிட்டன் வீரர் ஜேக் டிரேப்பர் 5வது இடம், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 6வது இடம், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 7வது இடத்தில் மாற்றமின்றி தொடர்கின்றனர். இத்தாலி ஓபனில் சிறப்பாக ஆடிய இத்தாலி வீரர் லொரென்ஸோ முஸெட்டி, ஒரு இடம் உயர்ந்து, 8ம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் ஒரு இடம் தாழ்ந்து 9ம் இடத்துக்கு வந்துள்ளார்.