Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாச நடனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்,: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற கோயில் ஒன்றில் உதவி அர்ச்சகராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவரும் சில அர்ச்சகர்களும் வீட்டில் மது அருந்தி விட்டு ஆபாசம் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் உள்பட நடனம் ஆடிய அர்ச்சகர்கள் 4 பேரும் கோயிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

இதற்கிடையே உதவி அர்ச்சகர், தன்னை 2 பேர் தாக்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் திடீரென புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் ஆபாச நடன வீடியோ வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.