1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 6 இடங்கள்.
சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400.
i) மெக்கானிக்கல்:
அ. வலியமாலா: 3 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
ஆ. பெங்களூரு: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
தகுதி: 60% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ.
ii) கெமிக்கல்:
அ. வலியமாலா: 1 இடம் (பொது). தகுதி: 60% மதிப்பெண்களுடன் கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ.
2. டெக்னீசியன் ‘பி’: 10 இடங்கள்.
சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
i) எலக்ட்ரானிக் மெக்கானிக்: 1 இடம்.
அ. பெங்களூரு: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி என்சிவிடி நிறுவனத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
ii) பிட்டர்: 9 இடங்கள்
அ. வலியமாலா: 5 இடங்கள் (பொது). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆ. பெங்களூரு: 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-2, எஸ்சி-1). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ/என்ஏசி/என்டிசி என்சிவிடி நிறுவனத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
3. டிராப்ட்ஸ்மேன்- பி: 1 இடம்.
சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
i) மெக்கானிக்கல்:
அ. வலியமாலா: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி ஆகியவற்றில் ஏதாவதொன்றில் என்சிவிடி நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 04.09.2026 அன்று 35க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
4. பயர்மேன்-‘ஏ’. 1 இடம்.
சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200.
i) வலியமாலா: 1 இடம் (ஒபிசி).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் திடகாத்திரமான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.
வயது: 04.09.2026 அன்று 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
www.lpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2026.



