பணியிடங்கள் விவரம்:
1. டெக்னீசியன் (1)-டிஇ-01: தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட்டில் 55% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் (1) டிஇ-02: 10 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்டில் 55% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. டெக்னீசியன் (1) டிஇ-03: 3 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் உணவு உற்பத்தி பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. டிரைவர் (டி-01): 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறனும், இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள்.
சம்பளம்: ரூ.39,970.
5. டெக்னிக்கல் ஆபீசர்: (டிஓ-01): 4 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.91,070. தகுதி: மருத்துவமனை நிர்வாகம்/மருத்துவமனை மேலாண்மை ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
டிரேடு தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://ccmb.res.in/jobs என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2026.
