Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

பணியிடங்கள் விவரம்:

1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 53 இடங்கள். சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300. வயது: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 37க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். தகுதி: பிசிஏ பட்டம் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேஷன்/கம்யூனிகேஷன் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1,100/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.patnahighcourt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (30.04.2026.)