Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள வெள்ளத்தின்போது 1,600 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்

காத்மாண்டு: நேபாள வெள்ளத்தின் போது துரிதமாக செயல்பட்டு 1,600 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய தலைமை ஆசிரியரை பலரும் வெகுவாக பாராட்டுகின்றனர். நேபாளத்தில் கடந்த 26ம் தேதி பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அந்த சமயத்தில், ஆற்றங்கரைக்கு அருகில் இருந்தவர்கள், மலையின் உயரமான இடங்களுக்கு சென்றதன் மூலம் உயிர் தப்பினர். இதுபோல, சமயோசிதமாக செயல்பட்ட 47 வயது தலைமை ஆசிரியர் ராஜேந்திர தபாடி, 1,643 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். திரிபுவன் திரிசூலி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ள தபாடிக்கு காலை 9.20 மணி அளவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்பான தகவல்கள் தெரியவந்தன.

அருகாமை கிராமமான பெத்ரவாடியில் உள்ள ஒருவர் நண்பர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது கிராமம் முழுக்க வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறி உள்ளனர். சில பெற்றோரும் ஆற்றில் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பதாக எச்சரித்தனர். அந்த சமயத்தில் பள்ளியில் 900 மாணவர்கள் இருந்தனர். உடனடியாக தலைமை ஆசிரியர் தபாடி, அனைத்து மாணவர்களையும் வகுப்பறையை விட்டு வெளியேற வைத்து மலை மேட்டிற்கு அழைத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த பள்ளி வேன் டிரைவர்களை தொடர்பு கொண்டு பாலத்தை தாண்டி பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், மேடான பகுதியில் வாகனங்களை கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு மாணவர்களும், வேன்களும் பத்திரமாக இடத்திற்கு சென்ற அடுத்த சில நொடிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பள்ளி கட்டிடத்தை முழுமையாக இடித்து இழுத்துச் சென்றது. தங்கள் உயிரை காப்பாற்றிய தலைமை ஆசிரியருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் தபாடி சற்றும் தாமதிக்காமல், மாணவர்களை அப்புறப்படுத்தியதால் இன்று 1,643 மாணவர்களின் உயிரை அவர் காப்பாற்றி உள்ளார். வடக்கு நேபாளத்தில் வெள்ளத்தால் 69 பள்ளி கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து, 19,000 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது.