Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பகுதிநேர ஆசிரியருக்கு தீபாவளிக்கு முன்பே ஊதியத்தை வழங்க எஸ்டிபிஐ கோரிக்கை

சென்னை:எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ஊதியம் வழங்க வேண்டும் என்கிற பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மேம்பட திமுக அரசு தேவையான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.