இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சித்தரஞ்சன் ரயில்வே நிர்வாக பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (பிஜிடி) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (பிஜிடி): சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். தகுதி: இந்தி/அரசியல்அறிவியல்/வேதியியல்/கணிதம்/பொருளியல்/இயற்பியல்/வரலாறு/கம்ப்யூட்டர் சயின்ஸ்/உயிரியல்/அக்கவுன்டன்சி/பிசினஸ் ஸ்டடீஸ் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
2. ஜூனியர் இன்ஜினியர்: (பி- வே, வொர்க்ஸ்): சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. டிப்போட் மெட்டீரியல் சூபரின்டெண்டென்ட்: சம்பளம்- 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: பொது மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு 42க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி பற்றிய விவரம் இ.மெயிலில் தெரிவிக்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.clw.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.05.2026.


