"டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பிறகு, முறையாக பராமரிப்பு இல்லை" : ஒன்றிய அமைச்சர் சாடல்
டெல்லி : "டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பிறகு, முறையாக பராமரிப்பு இல்லை" என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தபோது உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டது என்று தனது மோசமான விமான பயண அனுபவத்தை பகிர்ந்தார் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். அமைச்சருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா நிர்வாகம்.


