Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டாடா டியோகோ இவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட டியோகோ இவி என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக்காரில் புதிதாக மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்கள் இடம் பெற்றுள்ளன. புதிய வடிவமைப்பில் கிரில்கள் உள்ளன. பம்பர், ஏர் வென்ட்களின் வடிவமைப்பும் சற்று மாற்றப்பட்டுள்ளது. 14 அங்குல வீல்கள் இடம் பெற்றுள்ளன. பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்கள், பம்பர்கள், டூயல் டோன் ரூப், ஷார்க் பின் ஆன்டெனா, குரோம் பூச்சுடன் கூடிய கதவு பிடிகள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர் உள்ளன. மேலும், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள் உட்பட பல அம்சங்கள் உள்ளன.

இதுதவிர 19.2 கிலோவாட் அவர் மற்றும் 24 கிலோவாட் அவர் என இரண்டு விதமான பேட்டரிகள் இடம் பெற்றுள்ளன. 19 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்டில் உள்ள மோட்டார் ்அதிகபட்சமாக 61 எச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 283 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். 24 கிலோவாட் அவர் வேரியண்டில் உள்ள மோட்டார் 75 எச்பி பவரையும் 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 226 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தற்போது சார்ஜிங் வேகம் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 30 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என நிறுவனம் கூறியுள்ளது.

இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான ஸ்மார்ட் 19 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ள கார் ஷோரூம் விலை சுமார் ரூ.6.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பியூர் பிளஸ் 19 கிலோவாட் அவர் வேரியண்ட் சுமார் ரூ.8.49 லட்சம், பியூர் பிளஸ் 24 கிலோவாட் அவர் சுமார் ரூ.9.49 லட்சம், கிரியேட்டிவ் பிளஸ் 24 கிலோவாட் அவர் வேரியண்ட் சுமார் ரூ.9.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.