டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பஞ்ச் இவி பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 40 கிலோவாட் பேட்டரி மற்றும் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 468 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என அராய் சான்றளித்துள்ளது. அதேநேரத்தில், அன்றாட பயன்பாட்டு தரவுகளின்படி 355 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. 65 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 26 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 135 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. 30 கிலோ வாட் அவர் பேட்டரியுடனும் கிடைக்கம்.
இந்தக் காரில் எச்விஏசி பேனல் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், எக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என 3 டிரைவிங் மோட்கள் .ள்ளன. டூயல் டோன் டேஷ்போர்ட், விண்டோ கண்ட்ரோல் பட்டன்கள், வெண்டிலேட்டுடன் கூடிய முன்புற சீட்கள், குரல் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சன்ரூப், ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், புதிய எல்இடி டெயில் லைட்டுகள், பின்பறம் எல்இடி லைட் பார் இடம் பெற்றுள்ளன. இதில் மீடியம் ரேஞ்ச் (30 கிலோவாட் அவர் பேட்டரி), லாங்க் ரேஞ்ச் (40 கிலோவாட் அவர் பேட்டரி) என ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வஞ்சர் ஆகியவற்றில் லாங்க் ரேஞ்ச் மற்றும் மீடியம் ரேஞ்சுடன் சேர்த்து 6 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான பஞ்ச் பேஸ்லிப்ட் ஸ்மார்ட் மீடியம் ரேஞ்ச் சுமார் ரூ.9.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான பஞ்ச் இவி லேஸ்லிப்ட் எம்பவர்டு பிளஸ் எஸ் லாங்க் ரேஞ்ச் சுமார் ரூ.12.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
