டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்சான் பியூர் பிளஸ் பிஎஸ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயணிகள் வாகனம் பெட்ரோல், டிவின் சிலிண்டர் ஐசிஎன்ஜி மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் ரூ.10 லட்சத்துக்கு கீழ் பனோரமிக் சன்ரூப் கொண்ட முதல் கார் இது என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் சன்ரூப்கள் இவை. மேலும், 10.25 அங்குல டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், எச்டி ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், எல்இடி டெயில் லைட்டுகள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலையாக பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.9.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.10.14 லட்சம். டிவின் சிலிண்டர் ஐசிஎன்ஜி மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.10.39 லட்சம், டீசல் மேனுவல் சுமார் ரூ.10.54 லட்சம், டீசல் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.11.19 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
