டாடா நிறுவனம் சியரா எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இந்தக் கார் அடுத்த மாதம் சந்தைப்படுத்தப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் சியரா காரை துவக்க ஷோரூம் விலை ரூ.11.49 லட்சத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் சந்தைப்படுத்தியிருந்தது. இதற்கு சந்தையிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இதன் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐசிஇ சியராவில் உள்ள கருப்பு நிற கிரில்கள், பின்புற பம்பர், ஸ்கிட் பிளேட் ஆகியவை எலெக்ட்ரிக் காரிலும் இடம் பெறும் என நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. சியரா ஐசிஇ கார் அறிமுகம் ஆகி 4 மாதங்களில் 20,000 கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

