Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி ஏஎம்டி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ராஸ் சிஎன்ஜியின் புதிய ஏஎம்டி வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி இடம் பெற்றுள்ளது. சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உள்ளது. இதன்மூலம் இந்த பிரிவில் முதன் முதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில் பியூர், பியூர் எஸ், கிரியேட்டிவ், கிரியேட்டிவ் எஸ், அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான பியூர் ஷோரூம் விலை சுமார் ரூ.8.7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான அக்கம்ப்ளிஷ்டு எஸ் சுமார் ரூ.10.77 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.