சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும்; பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்,
அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 11ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, தலைமையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று கண்டனக் குரல் எழுப்பி, நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்.


