Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவுவதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு மாற்றாகவும், காலி மதுபாட்டில்களை எளிதாகத் திரும்பப் பெறும் வகையிலும் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, டாஸ்மாக் கடைகளில் அமைக்கப்படும் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களில் காலி மதுபாட்டில்களைச் செலுத்தினால், அந்தப் பாட்டிலுக்கான ரூ.10 தொகை, மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் நேரடியாகப் பணமாகப் பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மதுபாட்டில்களில் உள்ள க்யூஆர் குறியீடு இல்லாமல் இருந்தாலோ அல்லது சேதமடைந்து ஸ்கேன் செய்ய முடியாத நிலையில் இருந்தாலோ, அந்தப் பாட்டில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அரசின் விற்பனைப் பதிவுகளுடன் சரிபார்க்க முடியாத காரணத்தால் அவை நிராகரிக்கப்படும் என்றும், நிராகரிப்புக்கான காரணம் இயந்திரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, படிப்படியாகத் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவி, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.