தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் : மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

Advertisement

டெல்லி : அதானி ஊழல், விவசாயிகள் பிரச்சனை, தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே மக்களவையில் பேசிய திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தஞ்சை - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.மேலும் பேசிய அவர், "தஞ்சை - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டத்துக்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் தற்போது வரை இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, இந்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எந்த ஒரு மொழியை கற்கவும் தடையில்லை என்றும் நிர்மலா சீதாராமனுக்கு திருச்சி சிவா பதில் அளித்தார். எந்த மொழியையும் கற்று கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை என்றும் ஆதிக்கம் செலுத்துவதை தான் எதிர்த்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

Advertisement