விஎஸ் நிறுவனம் டான்ஜென்ட் ஆர்ஆர் கான்சப்ட் மோட்டார் சைக்கிளை, மிலன் மோட்டார் வாகன கண்காட்சியில் கடந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த நிறுவனம் இந்தியாவில் டான்ஜென்ட் ஆர்ஆர் கான்சப்ட்க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. இதில் முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. இன்ஜின் விவரம் எதுவும் வெளியாகவில்லை. சூப்பர் ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் மோட்டார் சைக்கிளாக இது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிலன் மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்திய இஎப்எக்ஸ் 30 , ஆர்டிஆர் ஹைபர்ஸ்டண்ட் ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement
