Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழர்களுக்கு பாதுகாப்பு

வயிற்று பிழைப்புக்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா செல்வோரும், வடக்கே மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழர்களும் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 2015ம் ஆண்டு ஆந்திரா காடுகளில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் காயமே இன்னமும் ஆறாத நிலையில், தற்போது 3 தமிழர்கள் கர்நாடகா வனப்பகுதியில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ்நகர் மாவட்​டத்​தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணால​யத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்​பகுதியில் சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டையாடு​வ​தாக கூறி, கர்நாடக வனத்​துறை​யினர் நடத்​திய துப்​பாக்கி சூட்​டில் ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோணி​சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 தமிழர்கள் உயி​ரிழந்​தனர்.

உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்கள், கிராம மக்​கள் கொள்​ளே​கால், ஹனூர், தோமை​யார் பாளை​யம், ஜகன்​னாத தொட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள‌ வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கியதோடு, இருதினங்களாக அப்பகுதியில் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரும், அப்பகுதியில் மாடு மேய்க்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கர்நாடகா வனத்துறை, இதை மான்வேட்டை என புதுக்கதை கூறுகிறது.

நிகழ்வு எதுவாக இருந்தாலும், குற்றம் எதுவாக இருந்தாலும் கூட, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதுதான் முறையாகும். அதை விடுத்து, கையில் துப்பாக்கி இருக்கிறது என்பதற்காக சுட்டு வீழ்த்துவது கொடூர செயலாகும். பொதுமக்களின் போராட்டங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து எழும் எதிர்ப்பு குரல்கள் காரணமாக, கர்நாடக போலீசார் இப்போது வனத்துறையை சேர்ந்த 7 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே காவிரி விவகாரத்தில் இரு மாநிலத்திலும் பதற்றம் பற்றி கொண்டுள்ள நிலையில், இப்போது 3 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரீல்சில் காலம் கழித்து வரும் தமிழகத்தை ஆளும் தவெக அரசு இப்பிரச்னையை எப்படி கையாளப்போகிறது என்பதுவும் கேள்விக்குறியே. கர்நாடகா அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, வெளிப்படையான விசாரணை நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உரிய நிவாரணம் மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட முன்வரவேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பதோடு, அரசு பணி கிடைக்கவும் அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்நிலையில் சுட்டு கொல்லப்பட்டு உயிரிழந்த 3 தமிழர்களும், மேட்டூர் அணை உருவாக்கப்பட்டபோது, தங்கள் பூர்வீக வாழ்விடங்களையும், நிலங்களையும் இழந்து, இங்கிருந்து இடம்பெயர்ந்து கர்நாடகா எல்கை பகுதிகளில் குடியேறியவர்கள் என்ற தகவலும் நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது.

பல தலைமுறைகளாக கர்நாடக மண்ணில் வாழும் தமிழ் மக்களை இப்படி அநியாயமாக சுட்டு வீழ்த்துவது எவ்விதத்தில் நியாயம் என்கிற கேள்வியும் எழுகிறது. தமிழகத்தை ஆளும் தவெக அரசு வழக்கம்போல் வாய்மூடி மவுனியாக இருக்காமல், இப்போதாவது, கர்நாடக எல்லை பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் உயிர், உடமை மற்றும் வாழ்வாதார பிரச்னைகளுக்கு ஓங்கி குரல் ெகாடுக்க முன்வரவேண்டும்.