கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ், கருணை தொகை வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 44,573 பணியாளர்களுக்கு ரூ.49.69 கோடி போனஸ், கருணை தொகை வழங்கப்படும். பணியாளர்களுக்கு உபரி தொகையின் அடிப்படையில் 20% வரை போனஸ் வழங்கப்படும். உபரி தொகை இல்லாத கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு 10% போனஸ், கருணை தொகை வழங்கப்படும்


