டெல்லி: தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
* குடியரசு தலைவர்
ஆந்திரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உருவாக்க நாளில், அந்தந்தப் பகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளமான கலாச்சார பாரம்பரியமும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகளும் கொண்ட இந்த மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாழும் மக்களின் நல்வாழ்விற்கும், செழிப்பிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* பிரதமர் மோடி
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
* ராகுல் காந்தி வாழ்த்து
ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், சண்டிகர், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் அனைவருக்கும், அந்தந்தப் பகுதிகளின் உருவான நாளில் எனது நல்வாழ்த்துகள்.
இவற்றின் வளமான கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் இந்தியாவின் ஆன்மாவையே வடிவமைத்துள்ளன. இவை தொடர்ந்து செழித்தோங்கி, முன்னேற்றமடைந்து, மேலும் ஒருங்கிணைந்த ஒரு தேசத்தை உருவாக்குவதில் தொடர்ந்து பங்களிக்கட்டும்.


