காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து அம்மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், அதேப்போன்று நீர் பங்கீட்டை உடனடியாக கொடுக்க வேண்டும் தமிழக அரசு மற்றும் திமுக ஆகியோர் தாக்கல் செய்துள்ள அவசர மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதுபோன்ற சூழலில் காவிரி ஒழுங்காற்று குழுவாது அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காலை காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் தமிழகம், புதுவை,கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து கூட்டத்தின் முடிவில் காவிரியில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் என்று 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திரந்து விட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட பரிந்துரையின் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55வது அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று மாலை மூன்று மணியளவில் கூடியது. இதில் தமிழக அரசு தரப்பில் இருந்து நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த வடநரே, காவிரி தொழிட்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் மற்றும் மத்திய தொழில்நுட்ப பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வள பிரதிநிதிகள் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
இதேப்போன்று கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் முன்னதாக ஆணையம் உத்தரவிட்டும் தற்போது வரையில் நீர் திறந்து விடவில்லை. குறிப்பிாஅக உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ஆணையம் மீறி செயல்பட்டு வருகிறது. இப்போது கூட திறக்கப்பட்டுள்ள நீர், என்பது உபரியானது ஆகும்.
எங்களுக்கு தர வேண்டிய பங்கீட்டு நீர் தற்போது வரையில் நிலுவையில் தான் உள்ளது. கட்நாடகா அரசின் இந்த நடவடிக்கையால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இவை அனைத்தையும் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தெரிவித்தனர். ஆனால் கட்நாடகா பிரத்நிதிகள் இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாகவும், மழை கிடையாது என்ற காரணங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து கூட்டத்தின் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பிறப்பித்த உத்தரவில்,\\\\” இந்த விவகாரத்தில் முன்னதாக ஒழுங்காற்று குழு பரிந்துரையானது உறுதி செய்யப்படுகிறது. எனவே அதனை அடிப்படையாக கொண்டு காவிரியில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் என்று 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு கூட்டத்தை ஒத்திவைத்தார்.



