Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 5 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 5 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 78.09% எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 6.41 கோடி படிவங்கள் அச்சடிக்கப்பட்டு இதுவரை 5 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 10.21 லட்சம் படிவங்கள் அச்சடிக்கப்பட்டு இதுவரை 9.5 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 93.04% விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12 மாநிலங்களில் இதுவரை 72.66% எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.