Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் இதுவரை 1.51 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ரூ.4552 கோடி விநியோகம்

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு நேற்று காலை வரை 1,51,73,424 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.4552.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8ம் தேதி சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.

இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. 10ம் தேதி(நேற்று) காலை 10 மணி வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 1,51,73,424 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.4552.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.