Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.

தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் நேற்று முன்தினம் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே (18 வயது) உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த டி.குகேஷ் முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி.குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.