Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி: வனத்துறையினர் அறிவிப்பு

வி.கே.புரம்: அகஸ்தியர் அருவியில் 8 நாட்களுக்குப் பின் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வனச்சரகத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ளது.

இதனால் கடந்த 8 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கி கொள்ளப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் அனுமதியளித்துள்ளதைத்தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.