கடனா நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு
தென்காசி: கடனா நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், தர்மபுரம் மடம் மற்றும் சிவசைலம் கிராமங்களிலுள்ள கடனா நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 2026 மார்ச் 31 வரை 112 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி I&II, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி மற்றும் இரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 9923.22 ஏக்கர் பாசனப்பரப்புகள் பயன்பெறும்.
Advertisement
Advertisement