தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானாமதுரை ரயில் நிலையத்தில் மழலைகளுக்காக மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Advertisement

மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து சிறுவர் பூங்காவை மீண்டும் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையம் ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய நான்கு மார்க்கங்களில் இருந்து ரயில்கள் வரும் சந்திப்பு நிலையமாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு ஆக.12ம் தேதி மானாமதுரை-ராமேஸ்வரம் இடையே அகலரயில் பாதை திறக்கப்பட்டது. திருச்சி, மதுரை, விருதுநகர் மார்க்கமாக மானாமதுரை ரயில்நிலையம் வழியாக தினமும் 26 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் சென்னைக்கு இரவு 7.10 மணிக்கும், 10.20 மணிக்கும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. இது தவிர வாராந்திர ரயில்களான வாரணாசி, அயோத்தியா, புவனேஸ்வர், ஓகா, திருப்பதி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், எர்ணாகுளம், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மானாமதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில்களில் செல்வதற்கும் மானாமதுரை ரயில்நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்கின்றனர்.

இந்த ரயில்நிலையத்தில் முதல் வகுப்பு 2ம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ளநிலையில், தொலைதூரம் செல்ல குறிப்பிட்ட ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகளுக்கும், மானாமதுரை ரயில் நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பொழுது ேபாக்க சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இந்த பூங்காவில் சறுக்குதளம், பார் கம்பிகள், ஊஞ்சல், நடைபயிற்சி பாதையுடன் மலர்ச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2011 க்கு பிறகு இங்கிருந்த விளையாட்டு சாதனங்கள் சேதமானது. அதன்பின் பூங்காவில் கருவேலமரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்ட நிலையில் உடைந்த நிலையில் இருந்த விளையாட்டு சாதனங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளும், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கும் பொழுது போக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த பூங்காவை சீரமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘‘மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். தொலைதூரம் செல்லும் ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகளுக்கும், மானாமதுரை ரயில் நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பொழுது ேபாக்க சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பூங்கா அகற்றப்பட்ட நிலையில் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளும், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கும் பொழுது போக்க வழியின்றி தவித்து வருகின்றனர். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் இந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News