Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவநேய பாவாணர் நூலகத்தில் கலைஞர் படம் அகற்றம்..! வைரமுத்து கண்டனம்

சென்னை: தேவநேய பாவாணர் நூலகத்தில் இருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின் மாணவன் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்நாள் முதலமைச்சர் விஜய் அவர்கள் உதயநிதிக்கு விரோதியாக இருக்கலாம். ஆனால் கலைஞர் தனக்கு விரோதி என்று அவர் ஒரு நாளும் நினைத்து கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இன்று அமர்ந்திருக்கும் முதலமைச்சர் நாற்காலி என்பது முன்னவர்களால் செழுமை மற்றும் பெருமைப்படுத்தபட்டது. அந்த பெருமை தான் ஒரு பெரிய வரலாற்றை கொடுத்து கொண்டிருக்கிறது. அரசு சொல்லாமல் அதிகாரிகள் எப்படி கலைஞர் படத்தை அகற்றலாம்.

அந்த விழா முடிந்ததும் மீண்டும் கலைஞர் படம் மீண்டும் மாட்டப்பட்டதாக அறிகிறேன். கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ?, அவர் இல்லாமல் செம்மொழி உண்டா? இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக திகழ வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.