பிரியாணி சாப்பிடும் போட்டி - கடை மேலாளர் மீது வழக்குப்பதிவு
Advertisement
கோவை: கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்த எவ்வித முன்அனுமதியும் இன்றி பொது இடத்தில் கூட்டம் கூட்டி பொதுமக்களுக்குப் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை இணைக்கக் கூடிய முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பொதுமக்களுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement