சென்னை: அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறி உள்ளார்.
விஜய் மாமா, விஜய் மாமா என்று பாசமுடன் தன்னை அழைக்கும் குழந்தைகளுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய 500 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்படும் என்றார். அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கருவுற்ற பெண்களுக்காக ரூ.23 கோடி மதிப்பீட்டில் தாய் கேர் திட்டம் செய்லபடுத்தப்படும்.
12 மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 5 வெள்ளாடுகள் அல்லது 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 டெலி மெடிசின் மையங்கள் அமைக்கப்படும், கிராம பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனைகள் செய்யப்படும் மற்றும் மருந்துகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு இயன்முறை மருத்துவருடன் சேவை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


