தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிட எண்ணிக்கை தெரியாமல் பேசுவதா? அன்புமணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: தமிழகத்தில் மழைக்கால நோய் பாதிப்பு என்பது பதற்றமான சூழல் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ் மகளிர் நல்வாழ்விற்காக ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்திகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 196 உதவியாளர், 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 19 திறன்மிகு உதவியாளர்-II பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது.  அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் புதிய பணி ஆணைகள் வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 233 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அன்புமணி தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவர் பணியிடங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த அரசு மருத்துவர் பணியிடங்கள் எண்ணிக்கை 20,000 தான். இதில் 12,000 இடங்கள் காலி என்று சொல்கிறார். இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவமனைகளுக்கு வருகிற மக்களின் பயன்பாடு என்பது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. நான் அன்புமணியை கேட்டுக் கொள்வது நான்கரை வருட இந்த ஆட்சியில் 35,000 புதிய பணியிடங்களுக்கான பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மழைக்கால நோய் பாதிப்புகளுக்கான மருந்துகள் அதற்கான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மலேரியா, சிக்கன்குனியா போன்ற மழைநோய் பாதிப்புகளுக்கு ஏற்ற வார்டுகள் பணிகள் முடிவடைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 2,100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News