தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு நெஞ்சுவலி: தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கடராமன்(பொறுப்பு) திடீரென நெஞ்சுவலி காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கடராமன்(பொறுப்பு) நேற்று காலை வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைதொடர்ந்து உடனே டிஜிபியை கிண்டியில் உள்ள கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூத்த டாக்டர்கள் ஆய்வு செய்து ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டிஜிபியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம்
விசாரித்தார். அதைதொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை டிஜிபிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.