சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நீதிமன்றத்தில் பணியாற்றிய 32 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட கூடுதல் நீதிபதியாக இருந்த திருமகள், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியிட மாற்றம், சென்னை மனித உரிமை ஆணையத்தின் பதிவாளராக இருந்த முரளிதரன், உதகை மாவட்ட நீதிபதியாக பணியிடமாற்றம், சென்னை மாநகர சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியிட மாற்றம், சிபிஐ வழக்குகளை விசாரித்து வந்த மலர்வாலண்டினா, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம், எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வித்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.