தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில் நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அதிகபட்சமாக ரூ.19 ஆயிரம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. 2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு முழு அளவு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


