Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர்கள்

மொத்த இடங்கள்: 34.

சம்பளம்: ரூ.35,600- ரூ.1,30,800.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும். மேலும் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா/ நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் குறைந்தது ஒரு வருட கால அளவினைக் கொண்ட விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் விவரம்:

ஆர்ச்சேரி-1, அதலெடிக்ஸ்-4, பேட்மிண்டன்-1, கூடைப்பந்து-1,

பாக்சிங்-1, கனோயிங் மற்றும் கயாகிங்-1, சைக்கிளிங்-1, பென்சிங்-2, கால்பந்து-1, ஜிம்னாஸ்டிக்ஸ்-1, ஹாக்கி-1, ஜூடோ-1, கபடி-2, பாரா அதலெடிக்ஸ்-1, பாரா பாட்மிண்டன்-1, பாரா பவர் லிப்டிங்-1, நீச்சல்-2, நீச்சல் டைவிங்-1, டேபிள் ெ டன்னிஸ்-1, டேக்வோண்டோ-2, டென்னிஸ்-1, வாலிபால்-1, பளு தூக்குதல்- 3, வீல் சேர் பென்சிங்-1.

வயது: 01.07.2026 தேதியின்படி 21 வயது பூர்த்தியாகியிருக்க வேணடும். எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/ பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர் ஆகிய பிரிவினர்கள் 50 வயதிற்குள்ளும், இதர பிரிவினர்கள் 45 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, விளையாட்டு சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி திறனறியும் கேள்விகள் மட்டும் இடம் பெறும்.

www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.01.2026.