தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த கடிதத்தை இணைத்து பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதிநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த கடிதம் எப்படி கிடைத்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்
Advertisement
இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இக்கடிதத்தை வெளியிட்டிருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
Advertisement