Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பின்னோக்கி தமிழகம்

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் எனக்கூறி பொதுக்கூட்டங்களில் சினிமா வசனம் பேசி ஆட்சிக்கு வந்தார் முதல்வர் விஜய். ஆட்சிக்கு வந்து 100வது நாளை நெருங்கி விட்டது. மக்களுக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. 200 யூனிட் வரை இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பயனை நுகர்வோர் அனுபவிக்க முடியவில்லை. மாறாக மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

காவிரி விவகாரம், மேகதாது பிரச்னை, ெதாகுதி மறுவரையறை ஆகியவற்றை விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என தவெகவின் கூட்டணி கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்தன. ஆனால் தவெக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. காவிரி பிரச்னை ெதாடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் விஜய் ஆலோசனை நடத்துகிறார் என அமைச்சர்கள் பேட்டி அளிக்கின்றனர். அதற்கான படங்கள் வெளியிடுவதில்லை. முழுக்க முழுக்க பொய்களையே கூறி வருகின்றனர். அதற்கு மாறாக திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையும், திமுகவினர் மீது வழக்கு பதியவும், கைது செய்யும் படலமும் தான் நடக்கிறது. மக்களுக்கான பணிகள் இந்த ஆட்சியில் நடக்கவில்லை.

தொழில் ஈர்ப்பு மூலதனம் தொடர்பாக தேசிய அளவில் நடத்திய ஆய்வில் தமிழ்நாடு 6வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. மே மாதம் ஆட்சிக்கு வந்த 4 பேரின் செயல் திறனில் முதல்வர் விஜய் 4ம் இடத்தில் உள்ளார். 5வது இடத்தில் புதுவை உள்ளது. கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவிடம் இருந்து டி.கே.சிவக்குமார் ஆட்சி பொறுப்பை ஏற்றார். மே, ஜூன், ஜூலை மாதத்தில் இவரது திட்டங்களின் எண்ணிக்கை 319ல் இருந்து 400க்கு உயர்ந்து இருக்கிறது. ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்த முதலீடு ரூ.83 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு அலுமினியம் தொழிற்சாலை மற்றும் ஏர்போர்ட்டை கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக தெரிகிறது.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.12 ஆயிரம் கோடியாக முதலீடு உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தனியார் துறை முதலீடு 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திட்டங்களின் எண்ணிக்கை 183ல் இருந்து 121 ஆக குறைந்துள்ளது. மொத்த முதலீடாக ரூ.44 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.11 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. தனியார் துறை முதலீடு 75 சதவீதம் குறைந்துள்ளது. 4 மாநிலத்தில் தமிழ்நாட்டின் முதலீடு தடாலடியாக குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 மாநிலத்தில் கடைசி இடத்துக்கு தமிழ்நாடு வந்துள்ளது. இதற்கு காரணம் முதல்வர் விஜய் மீது தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இந்த ஆட்சிக்கு நிர்வாக திறமை இல்லை என்பதையே காட்டுகிறது. அமைச்சர்கள், தங்களது துறைகளை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாமல் ரீல்ஸ் மோகத்திலேயே இருந்து வருகின்றனர். இதனை விஜய் அரசு கவனத்தில் கொள்ளவில்லையென்றால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்பட்டு விடும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.