Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு தலைகுனியாது; திராவிட மாடல் அரசின் நான்காம் நாள் பரப்புரை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவதோடு, ஒன்றிய பாஜக அரசும் அதிமுக கூட்டணியும் தமிழ்நாட்டுக்கு செய்து வரும் துரோகத்தை தோலுரிக்கும் விதமாக தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரைக்கூட்டமானது கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டு வருகிறது.

கழகத் தலைவரது உத்தரவின் பேரில் நான்காம் நாள் பரப்புரையில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை நடைபெற்றது. திருவைகுண்டத்தில் கம்பம் செல்வேந்திரன் அவர்களும், குமிடிபூண்டியில் ஜெகத்ரட்சகன் அவர்களும், வேளச்சேரியில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், கீழ்பெண்ணாத்தூரில் சபாபதி மோகன் அவர்களும் , பவானிசாகரில் அந்தியூர் செல்வராஜ் அவர்களும், அறந்தாங்கியில் பொன் முத்துராமலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட ஒதுக்கப்படாமல் வஞ்சித்து வரும் பாஜக-அதிமுக கூட்டணியின் வஞ்சகத்தை பொது மக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். அதிமுக பாஜக கூட்டணியால் தமிழ்நாடு பட்ட அவலத்தை பேச்சாளர்கள் சுட்டிக் காட்டியது , பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஆகியவற்றை எடுத்துக் கூறும் போது மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது.

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும் பயனாளிகள், முக்கிய பிரபலங்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இப்பரப்புரை கூட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்து கொண்டனர். மேலும் மகளிர் உரிமை திட்டம் முதல் காலை உணவு திட்டம் வரை எதிர்க்கட்சிகளும் காப்பி அடிக்கும் வகையிலான சிறப்பான திட்டங்களை நமது மாண்புமிகு முதலமைச்சர் செயல்படுத்தி தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கச் செய்துவருவது பற்றி விரிவாக புள்ளி விவரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது அனைவராலும் கவனிக்கப்பட்டது.