Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 67 ரேடியோகிராபர்கள்

பணி: ரேடியோகிராபர்- 67 இடங்கள்.

சம்பளம்: ரூ.35,400- ரூ.1,30,400.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 32க்குள். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி பாடத்தில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி/ ரேடியோ டயாக்னசிஸ் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு/பிளஸ் 2/ டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2026.