தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கள உதவியாளர் (பீல்டு அசிஸ்டென்ட்) பணிக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Medical Recruitment Board) விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி: கள உதவியாளர் (Field Assistant).
மொத்த இடங்கள்: 41 (பொது- 9, பிற்பட்டோர்-10, முஸ்லிம்-1, மிகவும் பிற்பட்டோர்-5, எஸ்சி-13, எஸ்டி-3).
சம்பளம்: ரூ.18,200- ரூ.67,100.
வயது: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் பாடத்தில் குறைந்தபட்சம் ஒரு வருட படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
10ம் வகுப்பு, பிளஸ் 2, லேப் டெக்னீசியன் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2025.

