Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்ைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக 90 டிகிரி முதல் 95 டிகிரி வரையில் வெயில் நிலவுகிறது. இதனால் வெயில் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பியுள்ளனர்.

பரவலாக பெய்து வரும் மழையை பொறுத்தவரை, நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 120மிமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே, தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று தொடங்கி 7ம் தேி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

8ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளிலும், 9 மற்றும் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையை பொறுத்தவரையில் 91 டிகிரி இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.