Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தாம்பரம் சேலையூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இளைஞர் கொ*

சென்னை: தாம்பரம் சேலையூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் ஒரு போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போதை பழக்கத்திலிருந்து மீள, சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆண்டு அங்கு சேர்ந்தார். அங்கு சேர்ந்த 4 நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சேலையூர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டுத் துணியால் கைகள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததும் அம்பலமானது.

போதை மறுவாழ்வு மையத்தில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்த மணிகண்டன், ஏழுமலை, குணசீலன், ராஜ சுதாகர் மற்றும் ராஜ்கமல் ஆகிய 5 பேரைப் போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அருண்குமார் அங்கிருந்து தப்ப முயன்றதாகவும், அதனால் அவரைக் கட்டி வைத்து வாயில் துணியை வைத்து அழுத்தி அடக்க முயன்றதாகவும், மூச்சுத்திணறி அவர் இறந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, அந்த 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.