தஜிகிஸ்தான் அயினி விமானதளத்தை விட்டு வௌியேறிய இந்திய ராணுவம்: ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வி, காங்கிரஸ் விமர்சனம்
புதுடெல்லி: தஜிகிஸ்தானின் அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வௌியேறி உள்ளது. இது ஒன்றிய அரசின் ராஜதந்திர தோல்வி என விமர்சனம் எழுந்துள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் அயினி விமான தளம் இந்தியாவின் ஒரே தனித்துவம் வாய்ந்த வௌிநாட்டு விமான தளமாக விளங்கி வந்தது.
Advertisement
மத்திய ஆசியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அயினி விமான தளத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்திய ராணுவம் செயல்பட்டு வந்தது. ஆனால் 2022ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுப்பு தெரிவித்து விட்டது. இந்நிலையில் அயினி விமான தளத்தில் இருந்து இந்திய ராணுவம் வௌியேறி உள்ளது. இது ஒன்றிய பாஜ அரசின் ராஜதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Advertisement