தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி !

கொழும்பு: டி20 உலகக்கோப்பை தொடரின் 19வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் பின்னர் அதிரடியாக ரன்களைக் குவித்தது. தடிவனாஷே மருமானி 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைத் தந்தார். அந்த அணியின் இன்னிங்ஸிற்கு வலு சேர்த்த பிரையன் பென்னட், 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரயான் பர்ல் மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராசாவின் அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

170 ரன்கள் என்ற இலக்கை நோக்கித் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே முசரபானி மற்றும் பிராட் எவன்ஸ் ஜோடி கடும் அதிர்ச்சி அளித்தது. பவர்பிளே ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதால் ஆஸ்திரேலியா 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் போன்ற நட்சத்திர வீரர்கள் வரிசையாக வெளியேறினர். இருப்பினும், மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ரன்கள் குவித்து கிளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து 77 ரன்கள் சேர்த்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு சற்று நம்பிக்கையை அளித்தாலும், முசரபானியின் அபாரமான பந்துவீச்சு அந்த நம்பிக்கையைத் தகர்த்தது.

தனது பந்துவீச்சுத் திறமையால் ஆஸ்திரேலிய அணியைக் கட்டிப்போட்ட முசரபானி, 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். ஜிம்பாப்வே அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததுடன், குரூப்-பி பிரிவிலும் தனது இடத்தை உறுதி செய்தது.

Advertisement

Related News