Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஸ்வீடனை எளிதாக வீழ்த்தி முன்னேறியது பிரான்ஸ்: கேப்டன் எம்பாப்பே அமர்க்களம்

நியூயார்க்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில், ஸ்வீடன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்திய பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி அரங்கில் நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே பந்தை துடிப்புடன் கடத்திச் சென்ற பிரான்ஸ் வீர்கள், ஸ்வீடன் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

எனினும், ஸ்வீடன் தற்காப்பு அரணை முறியடித்து கோல் போட முடியாததால் பிரான்ஸ் தரப்பு சோர்வடைந்தது. முதல் பாதி ஆட்டம் முடிய சில விநாடிகளே இருந்த நிலையில், கேப்டன் கிலியன் எம்பாப்பே (45வது நிமிடம்) அமர்க்களமாக கோல் போட்டு பிரான்ஸ் அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் அதே உத்வேகத்துடன் தாக்குதலை தீவிரப்படுத்திய பிரான்ஸ் அணிக்கு 53வது நிமிடத்தில் பிராட்லி பர்கோலா, 74வது நிமிடத்தில் மீண்டும் எம்பாப்பே கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது (ரவுண்ட் ஆப் 16). பிலடெல்பியாவில் ஜூலை 4ம் தேதி நடக்க உள்ள போட்டியில் பிரான்ஸ்-பராகுவே அணிகள் மோதுகின்றன.

* ஸ்வீடனுக்கு எதிராக பிரான்ஸ் அடித்த 3 கோலுக்கும் அற்புதமாக பாஸ் செய்து உதவிய (அசிஸ்ட்) நடுகள வீரர் மைகேல் ஓலிஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை தட்டிச் சென்றார்.

* பிரான்ஸ் தரப்பில் மொத்தம் 25 கோல் முயற்சிகளும் 12 ஷாட்களும் அடிக்கப்பட்ட நிலையில், ஸ்வீடன் 6 முறை முயற்சி மேற்கொண்டதில் 2 ஷாட்கள் மட்டுமே இலக்கு நோக்கி அமைந்தன. அவற்றையும் பிரான்ஸ் கோல் கீப்பர் தடுத்து வெளியேற்றினார்.