Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஸ்வீடனை 3-0 என வீழ்த்தி ரவுன்ட் ஆப் 16 சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி: கேப்டன் எம்பாப்பே 2 கோல் அடித்து அசத்தல்

நியூயார்க்: 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுமுடிவடைந்து தற்போது ரவுன்ட்ஆப் 32 சுற்றுபோட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில்நடந்த போட்டியில் 2முறை சாம்பியனான பிரான்ஸ், ஸ்வீடன் அணியுடன் மோதியது. விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் முதல்பாதியில் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே கோல் அடித்துமுன்னிலை ஏற்படுத்தினார்.

2வது பாதியில்ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா கோல் அடிக்க பிரான்ஸ் 2- 0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் எம்பாப்பே தனது 2வது கோலை அடித்தார். ஸ்வீடன் அணியால் கடைசிவரை ஆறுதல் கோல் கூடி அடிக்க முடியவில்லை.முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. 1998 இறுதிப் போட்டியில் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதற்குப் பிறகு, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். அடுத்ததாக கால்இறுதிக்கு முந்தைய ரவுன்ட்ஆப் 16 சுற்றில் வரும் 5ம் தேதி பராகுவேயுடன் பிரான்ஸ் மோத உள்ளது.

‘நாக்அவுட்டில் 10’

28 வயதான எம்பாப்பே உலக கோப்பையில் நாக்அவுட் சுற்றுகளில் மட்டும் இதுவரை 10 கோல் அடித்துள்ளார். வேறு யாரும் 7 கோலை தாண்டியதில்லை. உலக கோப்பையில் இதுவரை 19 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, நாக்அவுட் சுற்றில் 5 கோல் மட்டுமே அடித்துள்ளார். எம்பாப்பே உலக கோப்பையில் இதுவரை 18 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை வரலாற்றில் நாக்-அவுட் சுற்றில் ஒரு கோல் கூட அடித்தது இல்லை. இந்த தொடரில் எம்பாப்பே, மெஸ்சி தலா 6 கோல் அடித்து கோல்டன் ஷூ போட்டியில் உள்ளனர்.