சுசூகி நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட பர்மன் ஸ்டிரீட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில், 124சிசி ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.4 எச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர் பாக்ஸ் உள்ளது.
மேக்சி ஸ்கூட்டர் மாடலில் உருவாக்கப்பட்டுள்ள இதில், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லாம்ப் மற்றும் டிஆர்எல்கள் இடம் பெற்றுள்ளன. முந்தைய மாடலை விட சற்று ஸ்லீக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வடிவத்தில் எல்இடி டெயில் லாம்ப்கள் இடம் பெற்றுள்ளன. 4.2 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் வசதி, கீலெக்ஸ் இக்னிஷன் இடம் பெற்றுள்ளன. சீட்டுக்கு அடியில் இட வசதி 21.5 லிட்டரில் இருந்து 24.6 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, முன்புறம் இரண்டு ஸ்டோரேஜ் அறைகள் உள்ளன. இதில் 2 வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் துவக்க விலை சுமார் ரூ.1.02 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.1.13 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள பர்க்மன் ஸ்டிரீட் இஎக்ஸ் டிரிம் விலை ரூ.1.08 லட்சம். இதில் எந்த மாற்றமும் இல்லை.


